Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 14.ஸ்வநிஷ்ட்டாபிஜ்ஞாதிகாரம் (பத்தி 1)
அர்த்தாநுசாஸந பாகம் – 14.ஸ்வநிஷ்ட்டாபிஜ்ஞாதிகாரம்
ஸ்வரூப உபாய அர்த்தேஷு அவிதத நிவித்ய ஸ்திரமதே: ஸ்வநிஷ்ட அபிஜ்ஞானம் ஸுபகம் அபவர்க்காத் உபதநாத் ப்ரதிம்நா யஸ்ய ஆதௌ ப்ரபவதி விநீத: ஸ்தகயிதும் கபீராந் துஷ்பூராந் ககநமஹத: சித்ர நிவஹாந்
– ஒருவன் தனது ஸ்வரூபம், ப்ரபத்தி என்னும் உபாயம், மோக்ஷம் என்னும் பலன் ஆகியவற்றில் உண்மையான நிலையான உறுதியுடன் இருக்கக்கூடும்; இப்படிப்பட்டவன் தனது இந்த நிலைகளைப் பற்றிய ஞானம் கைக்கொள்ளுதல் என்பது அவனுக்கு மிகவும் நெருக்கமாக உள்ள மோக்ஷத்தைக் காட்டிலும் மிகவும் இனிமையானதாகும். இப்படிப்பட்ட ஞானம் மூலம், தெளிந்த புத்தி உடையவனாக இருந்து, தனக்கு முன்பாக நிரப்ப இயலாததும், ஆகாயம் போன்று விரிந்ததும் ஆகிய தோஷங்கள் என்னும் தடைகளை மறைக்கும் வல்லமை பெறுகிறான்.