Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 13.க்ருதக்ருத்யாதிகாரம் (பத்தி 8)

அர்த்தாநுசாஸந பாகம் – 13.க்ருதக்ருத்யாதிகாரம்

பகவதி ஹரௌ பாரம் கந்தும் பரந்யஸநம் க்ருதம் பரிமித ஸுக ப்ராப்த்யை க்ருத்யம் ப்ரஹீணம் அக்ருத்யவத் பவதி ச வபுவ்ருத்தி: பூர்வம் க்ருதை: நியதக்ரமா பரம் இஹ விபோ: ஆஜ்ஞாஸேது: புதை: அநுபால்யதே

– ஸம்ஸாரத்தைக் கடக்கும் பொருட்டு, விரோதியைப் போக்கவல்ல எம்பெருமானின் திருவடிகளில் பரந்யாஸம் (நம்மைக் காக்கும் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தல்) செய்யப்பட்டது. அற்பமான பலன்கள் அளிக்கக்கூடிய காம்யகர்மங்கள், செய்யத்தகாதவை என்றே விடப்பட்டன. முன்பு செய்த கர்மங்களின் பலன் மூலமாகவே இனி உடல் பேணுதலும் நடைபெறும். இதற்காக ஏதும் இனி செய்யப்பட வேண்டியதில்லை. ஆகவே ப்ரபத்திக்குப் பிறகு எம்பெருமானின் ஆணையால் ஏற்படுத்தப்பட்ட அணைகளாகிய நித்ய நைமித்திக கர்மங்கள் மட்டுமே, தங்களது ஸ்வரூபம் அறிந்த ப்ரபந்நர்களால் கைக்கொள்ளப்படும்.