Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 13.க்ருதக்ருத்யாதிகாரம் (பத்தி 7)
அர்த்தாநுசாஸந பாகம் – 13.க்ருதக்ருத்யாதிகாரம்
மன்னவர் விண்ணவர் வானோர் இறை ஒன்றும் வான்கருத்தோர் அன்னவர் வேள்வி அனைத்தும் முடித்தனர் அன்புடையார்க்கு என்ன வரம் தர என்ற நம் அத்திகிரித் திருமால் முன்னம் வருந்தி அடைக்கலம் கொண்ட நம் முக்கியரே.
– தன்னிடம் பக்தி கொண்டவர்களுக்கு மேலும் என்ன வரம் அளிக்கலாம் என்று எண்ணியபடி ஹஸ்திகிரி (காஞ்சீபுரம்) மலையில் எழுந்தருளியுள்ள வரதராஜன், தன்னால் காக்கப்பட வேண்டியவர்கள் என்று ப்ரபந்நர்களை மிகவும் ப்ரயாஸப்பட்டு ஏற்றுக் கொள்கிறான். இப்படிப்பட்ட ப்ரபந்நர்கள் – நமக்கு அரசர்கள் போன்றவர்கள், தேவர்கள் போன்று நம்மால் ஆராதிக்கப்பட வேண்டியவர்கள், நித்யஸூரிகளின் தலைவனான எம்பெருமானின் இருப்பிடமான பரமபதத்தி வசிக்கவேண்டும் என்னும் ஆர்வம் உடையவர்கள், நல்லது கெட்டது அறியக்கூடிய அன்னம் போன்றவர்கள், செய்ய வேண்டியதைச் செய்து முடித்தவர்கள் ஆவர்.