Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 13.க்ருதக்ருத்யாதிகாரம் (பத்தி 1)
அர்த்தாநுசாஸந பாகம் – 13.க்ருதக்ருத்யாதிகாரம்
ஸமர்த்தே ஸர்வஜ்ஞ ஸஹஜ ஸஹ்ருதி ஸ்வீக்ருத பரே யத் அர்த்தம் கர்த்தவ்யம் ந புநரிஹ யத் கிஞ்சித் அபி ந: நியச்சந்தஸ்தஸ்மிந் நிருபாதி மஹாநந்த ஜலதௌ க்ருதார்த்தீகுர்ம: ஸ்வம் க்ருபணம் அபி கைங்கர்ய தநிந:
– அனைத்தையும் முடிக்கும் சக்தி உள்ளவன், அனைத்தையும் அறிந்தவன், தன்னுடைய ஸ்வபாவத்தாலேயே நம்மிடம் அன்புடன் உள்ளவன் – இப்படிப்பட்ட ஸர்வேச்வரன் நம்மைக் காப்பாற்றும் பொறுப்பை தான் எடுத்துக் கொண்ட பின்னர், அதற்காக நாம் மீண்டும் இந்த உலகில் ஏதும் செய்யத் தேவையில்லை. அதன் பின்னர், நமது ஆத்மாவை எல்லையற்ற ஆனந்தக் கடலாக உள்ள ஸர்வேச்வரனின் அனுபவம் என்பதிலேயே நமது ஆத்மாவை நிலைநிறுத்த வேண்டும். அந்த மோக்ஷம் என்பது உடனே கிட்டாத தரித்ரம் அடைந்தவர்களாக நின்றாலும், நமக்குக் கைங்கர்யம் என்னும் பெருஞ்செல்வம் கிட்டியதை எண்ணி மகிழ்வுடன் இருப்போமாக.