Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 12.ஸாங்கப்ரபதநாதிகாரம் (பத்தி 19)
அர்த்தாநுசாஸந பாகம் – 12.ஸாங்கப்ரபதநாதிகாரம்
யுக்ய ஸ்யந்தந ஸாரதி க்ரமவதி த்ரயந்த ஸந்தர்சிதே தத்த்வாநாம் த்ரிதயே யதார்ஹ விவித வ்யாபாரஸந்தாநிநி ஹேதுத்வம் த்ரிஷு கர்த்துபாவ உபயோ: ஸ்வாதீநதைகத்ர தத் ஸ்வாமி ஸ்வீக்ருத யத் பர: அயம் அலஸ: தத்ர ஸ்வயம் நிர்பர:
– குதிரை, தேர், தேர் ஓட்டுபவன் என்ற மூன்றைப் போன்று, மூன்று தத்துவங்களான சித், அசித் மற்றும் ஈச்வரன் ஆகியவை செயல்பாடுகளிலும் தன்மைகளிலும் உள்ளதாக வேதாந்தங்கள் கூறுகின்றன. இந்தச் செயல்பாடுகளைப் பொறுத்தவரை மூன்றுமே காரணமாக இருத்தல் என்பதைக் கொள்கின்றன. இவற்றில் செயல்கள் செய்வது என்பது சித் மற்றும் அசித் ஆகிய இருவரிடமும், செயல்கள் செய்யாத தன்மை ஈச்வரனிடமும் காணப்படுகின்றன. ஆகவே, எந்த ஒரு எஜமானனான எம்பெருமானால் தன்னைக் காக்கும் பொறுப்பு ஏற்கப்படுகிறதோ, அந்த ஜீவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் பொறுப்பில்லாதவனே ஆகிறான்.