Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 12.ஸாங்கப்ரபதநாதிகாரம் (பத்தி 18)

அர்த்தாநுசாஸந பாகம் – 12.ஸாங்கப்ரபதநாதிகாரம்

அறவே பரமென்று அடைக்கலம் வைத்தனரன்று நம்மைப் பெறவே கருதிப் பெருந்தகவுற்ற பிரானடிக்கீழ் உறவே இவனுயிர் காக்கின்ற ஒருயிருண்மையை நீ மறவேலென நம் மறைமுடி சூடிய மன்னவரே.

– நமது ஆசார்யர்கள் வேதங்கள் என்னும் ஸாம்ராஜ்யத்தில் முடிசூடி நிற்கும் அரசர்கள் ஆவர். இந்த ஆசார்யர்கள் - தனது கருணை காரணமாக, எல்லையற்ற காலமாக நம்மைக் காப்பது என்னும் உறுதியைக் கொண்டுள்ள எம்பெருமானின் திருவடியின்கீழ், நம்மை ரக்ஷிக்கும் பொறுப்பு நம்மைவிட்டு நீங்கும்படி ரக்ஷிக்கப்பட வேண்டிய வஸ்துவாக ஸமர்ப்பிக்கின்றனர். நம்மிடம், “அந்தர்யாமியாக உள்ள எம்பெருமான், அவனுடைய அடிமையாக உள்ள உன்னை எப்போதும் ரக்ஷிப்பான் என்பதை மறக்காதே”, என்று உபதேசம் செய்தனர்.