Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 12.ஸாங்கப்ரபதநாதிகாரம் (பத்தி 17)

அர்த்தாநுசாஸந பாகம் – 12.ஸாங்கப்ரபதநாதிகாரம்

ப்ரபத்தியை அநுஷ்டிப்பதில் சாதுர்யம்

மூலம் – ஆகையால் இருந்த நாளில் நிரபராத கைங்கர்யத்தையும் ப்ராரப்த சரீராநந்தரம் மோக்ஷத்தையும் சேரப் பலமாகக் கோலிப் ப்ரபத்தி பண்ணுவார்கள் நிபுணர்.

– ஆகவே அறிந்தவர்கள் எவ்விதம் ப்ரபத்தி செய்வார்கள் என்றால், வாழ்நாளில் தவறாத கைங்கர்யம் செய்தபடி இருத்தல் வேண்டும் என்றும், பலன் தரத் தொடங்கிவிட்ட கர்மங்கள் முடிந்து உயிரைவிடும் நேரத்தில் மோக்ஷம் கிட்டவேண்டும் என்றும் செய்வார்கள்.