Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 12.ஸாங்கப்ரபதநாதிகாரம் (பத்தி 15)
அர்த்தாநுசாஸந பாகம் – 12.ஸாங்கப்ரபதநாதிகாரம்
நடாதூர் அம்மாள் அருளிய ப்ரபத்தியின் சுருக்கம்
மூலம் – இது ஸாங்காநுஷ்டாநத்துக்கு நடாதூரம்மாள் அருளிச்செய்யும் சுருக்கு: - “அநாதிகாலம் தேவரீருக்கு அநிஷ்டாசரணம் பண்ணுகையாலே ஸம்ஸரித்துப் போந்தேன். இன்று முதல் அநுகூலனாய் வர்த்திக்கக் கடவேன். ப்ரதிகூலா சரணம் பண்ணக்கடவேனல்லேன். தேவரீரைப் பெறுகைக்கு என் கையில் ஒரு கைம்முதலில்லை. தேவரீரையே உபாயமாக அறுதியிட்டேன். தேவரீரே உபாயமாகவேணும். அநிஷ்ட நிவ்ருத்தியிலாதல் இஷ்ட ப்ராப்தியிலாதல் எனக்கினி பரமுண்டோ?”, என்று.
– ப்ரபத்தியை அதன் அங்கங்களுடன் அநுஷ்டிக்க நடாதூர் அம்மாள் அருளிச்செய்த சுருக்கம் பின்வருமாறு – எல்லையற்ற காலமாக நான் உனக்குப் பிடிக்காதவற்றை மட்டுமே செய்தபடி ஸம்ஸாரத்தில் சுற்றித் திரிந்தேன். இந்த நாள் தொடங்கி உனக்கு எது விருப்பமோ அதனை மட்டுமே செய்வேன். உனக்கு வருத்தம் உண்டாக்கும் எதனையும் நான் இனி செய்யமாட்டேன். உன்னை அடைவதற்கு என்னிடம் எந்தவிதமான முதலுமில்லை. உன்னையே உபாயமாகக் கொள்வது என்று முடிவு செய்துவிட்டேன். என்னுடைய உபாயமாக நீயே இருத்தல் வேண்டும். இனி எனக்குத் தீமையை ஏற்படுத்துவதை தவிர்த்தல், நன்மையை உண்டாக்குதல் ஆகிய செயல்களில் என் பொறுப்பு ஏது இல்லை; அவை உன்னுடையதே ஆகும்.