Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 12.ஸாங்கப்ரபதநாதிகாரம் (பத்தி 11)

அர்த்தாநுசாஸந பாகம் – 12.ஸாங்கப்ரபதநாதிகாரம்

ப்ரபத்தி மந்த்ரங்களில் பரஸமர்ப்பணமே முக்கியம்

மூலம் – இப்பரஸமர்ப்பணமே ப்ரபத்தி மந்த்ரங்களில் ப்ரதாநமாக அநுஸந்தேயமென்னு மிடத்தை அநேநைவ து மந்த்ரேண ஸ்வாத்மாநம் மயி நிக்ஷிபேத் மயி நிக்ஷிப்த கர்த்தவ்ய: க்ருதக்ருத்யோ பவிஷ்யதி என்று ஸாத்யகி தந்த்ரத்திலே பரஸ்வீகாரம் பண்ணுகிற சரண்யன்தானே தெளியவருளிச் செய்தான்.

– ப்ரபத்தி மந்த்ரங்களில் முக்கியமாக பரஸமர்ப்பணமே அநுஸந்திக்கப்படுகிறது என்பதை ஸாத்யகி தந்த்ரத்தில், நம்மைக் காப்பாற்றுவதாக உறுதி அளிக்கின்ற எம்பெருமானே கூறுவதைக் காணலாம். இந்த வரியானது - அநேநைவ து மந்த்ரேண ஸ்வாத்மாநம் மயி நிக்ஷிபேத் மயி நிக்ஷிப்த கர்த்தவ்ய: க்ருதக்ருத்யோ பவிஷ்யதி – இந்த மந்த்ரம் கொண்டு ஒருவன் தனது ஆத்மாவை என்னிடம் ஸமர்ப்பணம் செய்யவேண்டும்; இப்படிச் செய்யவேண்டியதை என்னிடம் செய்தவன், செய்யவேண்டியதைச் செய்தவன் ஆகிறான் – என்பதாகும்.