Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 12.ஸாங்கப்ரபதநாதிகாரம் (பத்தி 10)

அர்த்தாநுசாஸந பாகம் – 12.ஸாங்கப்ரபதநாதிகாரம்

த்வயத்தில் பரஸமர்ப்பணம்

மூலம் – இப்படி இவை ஆறும் இம்மந்த்ரத்திலே விமர்சதசையில் தனித்தனியே அநுஸந்தித்தாலும் வாக்யார்த்த ப்ரதிபத்தி தசையில் அல்லாத வாக்யார்த்தங்கள்போலே ஸாங்கமான ப்ரதாநம் ஏகபுத்தயாரூடமாம். ஆகையால் யதாசாஸ்த்ரம் ஸாங்கப்ரதாநா நுஷ்டாநம் ஸக்ருத் கர்த்தவ்யமாயிற்று. அநேக வ்யாபார ஸாத்ய தாநுஷ்கனுடைய லக்ஷ்ய வேதார்த்தமான பாணமோக்ஷம் க்ஷணக்ருத்யமாகிறாப்போலே இவ்வாத்ம ரக்ஷாபர ஸமர்ப்பணமிருக்கும்படியென்று ச்ருதிஸித்தம்.

– இப்படியாக இந்த ஆறும் (ஐந்து அங்கங்கள், ஒரு அங்கி) தனித்தனியே அநுஸந்திக்கப்பட்டாலும், ஒரே பொருளை அளிக்கவல்ல வாக்யமாகவே கொள்ள வேண்டும். இப்ப்டியாக ஆத்ம ரக்ஷ பரஸமர்ப்பணம் என்பது சாஸ்த்ரங்கள் மூலமாக, ஒருமுறை மட்டுமே இயற்றப்படுவது என்று அறியலாம். ஒரு வில்லாளி இலக்கைக் குறி வைத்து அம்பு எய்யும்போது, அவன் பல செயல்களைச் செய்தாலும் (அம்பு எடுத்தல், நாண் ஏற்றுதல், குறி பார்த்தல் போன்றவை), அம்பு விடுதல் என்பது ஒரு க்ஷணத்தில் முடிந்துவிடுகிறது. இது போன்றே எம்பெருமானிடம் தனது ரக்ஷகத்தின் பொருட்டு ஸமர்ப்பணம் செய்தல் என்பது ஒரு க்ஷணத்தில் நடப்பதாகும். இதனை ச்ருதிகளில் காணலாம்.