Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 12.ஸாங்கப்ரபதநாதிகாரம் (பத்தி 9)

அர்த்தாநுசாஸந பாகம் – 12.ஸாங்கப்ரபதநாதிகாரம்

த்வயத்தில் பரஸமர்ப்பணம்

மூலம் – இப்படி சேஷத்வாநுஸந்தான விசிஷ்டமான ஸ்வரக்ஷாபர ஸமர்ப்பணம் த்வயத்தில் உபாயபரமான பூர்வகண்டத்தில் மஹாவிச்வாஸபூர்வக கோப்த்ருத்வவரண கர்ப்பமான சரணசப்தோபலிஷ்ட க்ரியாபதத்திலே சேர்ந்து அநுஸந்திக்கப் ப்ராப்தம்.

– த்வயத்தின் முதல் பகுதியில் உபாயம் கூறப்படுகிறது. தனது ரக்ஷகத்திற்கு எம்பெருமானையே சரணம் புகவேண்டும். இந்தச் செயலானது தான் எம்பெருமானின் அடிமை என்றும், அவனுக்காகவே உள்ளேன் என்ற எண்ணத்துடன் கூடியதாக இருத்தல் வேண்டும். இதனை ப்ரபத்யே என்னும் பதமானது சரணம் என்ற பதத்துடன் கூடியதாக உணர்ந்து எண்ணவேண்டும். சரணம் என்னும் பதம் “காப்பாற்றவேண்டும்” என்ற விண்ணப்பத்துடன் தொடங்குவதான மஹாவிச்வாஸத்தை உள்ளடக்கியதாகும்.