Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 12.ஸாங்கப்ரபதநாதிகாரம் (பத்தி 8)

அர்த்தாநுசாஸந பாகம் – 12.ஸாங்கப்ரபதநாதிகாரம்

ஆத்ம ஸமர்ப்பணம் குறித்து ஆளவந்தாரின் தாத்பர்யம்

மூலம் – இதுக்குமேல் மம நாத யதஸ்தி என்கிற ச்லோகத்தில் இஸ் ஸமர்ப்பணத்தைப் பற்ற அநுசயம் பண்ணிற்றும் ஸ்வரூபாதி விவேகமின்றிக்கே ஸமர்ப்பிக்கப்புக்காலும் தன்னுடைய த்ரவ்யத்தை ராஜாவுக்கு உபஹாரமாகக் கொடுப்பாரைப் போலே, “என்னது” என்கிற அபிமாநத்தோடே ஸமர்ப்பிக்கில் ஆத்மாபஹாரசைர்யம் அடியற்றதாகா தென்கைக்காகவத்தனை; அல்லது சாஸ்த்ர சோதிதமாய்த் தாம் அநுஷ்டித்த ஸமர்ப்பணத்தை அஜ்ஞக்ருத்யமாக்கினபடியன்று. ஆக இரண்டு ச்லோகத்தாலும் யதாவஸ்தித ஸ்வரூபாதி விவேகமில்லையேயாகிலும் “ந மம” என்று ஸ்வஸம்பந்தம் அறுக்கையே அஹமபி தவைவாஸ்மி ஹி பர: என்னும்படி பரஸமர்ப்பணப்ரதாநமான சாஸ்த்ரார்த்தத்தில் ஸாரமென்றதாயிற்று.

– அடுத்த ச்லோகத்தில் (ஸ்தோத்ரம் – 53) – என்னுடைய நாதனே – தன்னுடைய ஸ்வரூபத்திற்கு ஏற்றபடி ஒருவன் பரஸமர்ப்பணம் செய்தபோதும், அதனை அறியாமல் இருக்கக்கூடும்; இவன் ராஜாவுக்குத் தனதான ஒரு பொருளை கொடுப்பது போன்று செய்தாலும், அதுவரை ஆத்மாவைத் திருடியிருந்த குற்றத்தை முழுவதுமாக மறைத்துவிடாது. இதன் மூலம் ச்லோகம் 52ல் சாஸ்த்ர விதிகளின்படி செய்த ஸமர்ப்பணம் என்பது அறியாமையால் எழுந்தது என்று ஆளவந்தார் கூறுவதாகாது. ஆக இந்த இரண்டு ச்லோகங்கள் மூலமும் சாஸ்த்ரங்கள் கூறுவதான பரஸமர்ப்பணம் என்பது, ந மம – எனது அல்ல என்று கூறுவதும், தனது ஸ்வரூபத்தைப் பற்றிய ஞானம் இல்லை என்றாலும் அனைத்திலும் இருந்து பற்றுதல் நீங்கி நிற்பது என்பதுமே ஆகும். இதனையே சாஸ்த்ரத்தில் கூறப்பட்ட பரஸமர்ப்பணத்தின் ஸாரமாக ஆளவந்தார் (ஸ்தோத்ரம் – 60) - அஹமபி தவைவாஸ்மி ஹி பர: - நானும் உன்னுடைய ரக்ஷிக்க வேண்டிய பொறுப்பாக உள்ளேன் – என்றார்.