Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 12.ஸாங்கப்ரபதநாதிகாரம் (பத்தி 6)
அர்த்தாநுசாஸந பாகம் – 12.ஸாங்கப்ரபதநாதிகாரம்
ஆத்ம ஸமர்ப்பணம் என்றால் என்ன
மூலம் – ஆனபின்பு இங்கு ஸ்வநிர்பரத்வ பர்யந்த ரக்ஷகைகார்த்ய பாவநம் த்யுக்த ரக்ஷாபல ஸ்வாம்யம் ரக்ஷ்யஸ்யாத்ம ஸமர்ப்பணம்
– ஆகவே ஆத்மஸமர்ப்பணம் என்பது தனது ஆத்மா என்பது தன்னைக் காக்கும் ஸர்வேச்வரனுக்காகவே உள்ளது என்றும், ஆகவே ஆத்மா குறித்து தனது பொறுப்பு நீங்கியது என்றும், இந்த ஸமர்ப்பணம் மூலம் கிட்டும் பலன் தன்னுடையது அல்ல என்றும் எண்ணியபடி இருத்தல் ஆகும்.