Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 12.ஸாங்கப்ரபதநாதிகாரம் (பத்தி 4)
அர்த்தாநுசாஸந பாகம் – 12.ஸாங்கப்ரபதநாதிகாரம்
அதிகாரி விசேஷங்கள்
முமுக்ஷுமாத்ர ஸாமாந்யம் ஸ்வரூபாதி ஸமர்ப்பணம் அகிஞ்சநே பரந்யாஸ: த்வதிக: அங்கிதயா ஸ்தித: அத்ர ரக்ஷாபரந்யாஸ: ஸமஸ்ஸர்வே பலார்த்திநாம் ஸ்வரூப பல நிக்ஷேபஸ்த்வதிகோ மோக்ஷ காங்க்ஷிணாம்
– ஸ்வரூபம் மற்றும் பலன் ஆகியவற்றைச் ஸமர்ப்பணம் செய்தல் என்பது அனைத்து வகையான முமுக்ஷுக்களும் பொதுவானதே ஆகும். வேறு கதியற்ற முமுக்ஷு விஷயத்தில் தன்னைக் காக்கும் பொறுப்பை ஸமர்ப்பணம் செய்வது என்பது மேலும் ஓர் அங்கியாக உள்ளது. மற்ற பலன்களை விரும்பும் அதிகாரிகளுக்கும் காக்கும் பொறுப்பை ஸமர்ப்பணம் செய்தல் என்பது பொதுவாக உள்ளது. மோக்ஷத்தை விரும்பும் அதிகாரிகளுக்கு, ஸ்வரூபம் மற்றும் பல ஸமர்ப்பணம் என்பது அதிகமாக உள்ளது.