Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 12.ஸாங்கப்ரபதநாதிகாரம் (பத்தி 1)
அர்த்தாநுசாஸந பாகம் – 12.ஸாங்கப்ரபதநாதிகாரம்
அபீஷ்ட்டே துஸ்ஸாதே ஸ்வத இதரதோ வா க்வசந தத் பரந்யாஸம் யாச்சா அந்விதம் அபிவதந்தி ப்ரபதநம் இத: பச்சாத் அஸ்மத் யதந நிரபேக்ஷேண பவதா ஸமர்த்ய: அஸௌ அர்த்த: து இதி மதிவிசேஷம் ததாவிது:
விருப்பமான பலன் ஒன்றைத் தனது முயற்சியாலும், ப்ரபத்தி தவிர உள்ள வேறு எந்தவிதமான முயற்சியாலும் பெற முடியாமல் உள்ளபோது, அதனைச் செய்து முடிக்கும் திறன் கொண்ட ஒருவனிடம், அந்தச் செயலைச் செய்து கொடுக்கும்படி, வேண்டுதலுடன் பொறுப்பை ஒப்படைத்தல் என்பதே ப்ரபத்தி என்று ஆசார்யர்கள் கூறுகின்றனர். இது, “இந்தச் செயலுக்காக இந்த நேரம் முதல், என்னிடம் இருந்து எந்தவிதமான முயற்சியும் இருக்காது; ஆகவே இதனை என் பொருட்டு, எனக்காக நீ முடித்துத் தரவேண்டும்”, என்ற எண்ணத்துடன் இருத்தல் ஆகும்.