Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம் (பத்தி 29)

அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம்

அறிவித்தனர் அன்பர் ஐயம் பறையும் உபாயம் இல்லாத் துறவித்துனியில் துணையாம் பரனை வரிக்கும் வகை உறவு இத்தனை இன்றி ஒத்தாரென நின்ற உம்பரை நாம் பிறவித்துயர் செகுப்பீர் என்று இரக்கும் பிழை அறவே.

– பக்தியோகம் முதலான உபாயங்களைப் பின்பற்ற இயலாமல் வறுமையில் உள்ள நிலையில் நாம் இருக்கும்போதும், அவை நமக்குக் கைகொடுக்குமோ என்னும் ஐயத்தில் நாம் உள்ளபோதும், நமது நிர்க்கதியான நிலையை உணர்ந்த ஸர்வேச்வரன் நமக்கு உதவிடத் தயாராக உள்ளான். இப்படிப்பட்ட உபாயமாகிய அவனை அடையும் மார்க்கத்தை நம் மீது மிகுந்த அன்பு கொண்ட ஆசார்யர்கள் உபதேசித்துள்ளனர். இதன் மூலம் - நம்மைப் போன்றே கர்மங்களால் பீடிக்கப்படும் மற்ற தெய்வங்களை நாடி, நமக்குச் சிறிதும் தொடர்பு இல்லாத அவர்களிடம், “என்னை இந்த ஸம்ஸார துன்பத்தில் இருந்து விடுவிக்கவேண்டும்”, என்று கையேந்தி நிற்கும் தவறைச் செய்யமாட்டோம்.