Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம் (பத்தி 28)

அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம்

கோப்த்ருத்வவரணம் த்வயத்தில் கிட்டுவது

மூலம் – இவ்விடத்தில் உபாயத்வ அத்யவஸாய வாசகசப்தத்திலே கோப்த்ருத்வவரணம் அந்தர்நீதம். அஹம் அஸ்மி அபராதாநாம் ஆலயோ அகிஞ்சநோ அகதி: த்வம் ஏவ உபாய பூதோ மே பவதி ப்ரார்த்தநாபதி: சரணாகதிரித்யுக்தா ஸா தேவே அஸ்மிந் ப்ரயுஜ்யதாம் என்றும், உபாயோ க்ருஹ ரக்ஷித்ரோ: சப்த: சரணமித்யயம் வர்த்ததே ஸாம்ப்ரதம் உபாயார்த்த ஏக வாசக: என்றும் சொல்லுகிறபடியே உபாயாந்தர அசக்தனுக்கு ஸர்வேச்வரன் ஸர்வசாஸ்த்ரார்த்த ஸாதாரணமான ரக்ஷகத்வமாத்ரத்திலே நிற்கையன்றிக்கே ஸ்வீக்ருதபரனாய்க் கொண்டு உபாயாந்தர ஸ்தாநத்திலே நிவேசிக்கையாலும் ந்யஸ்தபரனான இவ்வதிகாரிக்குப் பின்பு அந்நயோபாயத்வம் நிலைநிற்கைக்காகவும் உபாயத்வாத்யவஸாயம் இவ்விடத்திலே விவக்ஷிதமாயிற்று. உபாயமென்றால் ஒரு விரகு என்ற மாத்ரமாகையாலே இவ்வுபாயத்வம் சேதந அசேதந ஸாதாரணமாயிருக்கையாலும், ரக்ஷிஷ்யதீதீ விச்வாஸோ கோப்த்ருத்வவரணம் ததா என்றும், ஸர்வஜ்ஞ: அபி ஹி விச்வேசா: ஸதா காருணிகோ அபி ஸந் ஸம்ஸாரதந்த்ர வாஹித்வாத் ரக்ஷாபேக்ஷாம் ப்ரதீக்ஷதே என்றும் சொல்லுகிறபடியே சேதநைகாந்தமான கோப்த்ருத்வவரணம் அநுஸந்தேயமாகையாலும் கோப்த்ருத்வவரணம் இங்கே விவக்ஷிதம். அதி சரண சப்தம் ஒரு ப்ரயோகத்திலே இரண்டு அர்த்தத்தை அபிகாநம் பண்ணமாட்டாமையாலே இவ்வதிகாரிக்கு அஸாதாரணமான உபாயத்வாத்யவஸாயம் இவ்விடத்திலே சப்தமாய் ஸர்வாதிகாரி ஸாதாரணமான கோப்த்ருத்வவரணம் அர்த்தமாகக் கடவது.

– த்வயத்தில் எம்பெருமான் மீது கொள்ளும் மஹாவிச்வாஸம் வெளிப்படையாகவே உள்ளதால், இங்கு நம்மைக் காப்பாற்றும்படி விண்ணப்பம் செய்தல் என்பது மறைமுகமாக சரணம் என்பதிலேயே உள்ளடங்கியது ஆகும். அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை (37-30) - அஹம் அஸ்மி அபராதாநாம் ஆலயோ அகிஞ்சநோ அகதி: த்வம் ஏவ உபாய பூதோ மே பவதி ப்ரார்த்தநாபதி: - நான் பிழைகளுக்கு இருப்பிடமாகவும், என்னைக் காப்பாற்றிக் கொள்ளும் திறன் அற்றவனாகவும், உன்னைத் தவிர அடையவேண்டிய பொருள் ஏதும் இல்லாதவனாகவும் உள்ளேன். அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை (37-31) - சரணாகதிரித்யுக்தா ஸா தேவே அஸ்மிந் ப்ரயுஜ்யதாம் – “நீயே எனக்கு உபாயமாக இருத்தல் வேண்டும்” என்று வேண்டுவதே சரணாகதி ஆகும்; அது எம்பெருமானிடம் செய்யப்படட்டும். அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை (37-29) - உபாயோ க்ருஹ ரக்ஷித்ரோ: சப்த: சரணமித்யயம் வர்த்ததே ஸாம்ப்ரதம் உபாயார்த்த ஏக வாசக: - சரணம் என்ற பதம் உபாயம், வீடு, ரக்ஷகன் என்பதை அளித்தாலும், இங்கு உபாயம் என்ற பொருளே தருகிறது. அனைத்தையும் காப்பவனாகவே எம்பெருமான் சாஸ்த்ரங்களில் கூறப்பட்டுள்ளான். ஆனால், சரணாகதி செய்த ப்ரபன்னனைக் காப்பதாக எம்பெருமான் பொறுப்பை ஏற்றுக் கொண்டுவிட்டதாலும், மற்ற உபாயங்களுக்குப் பதில் எம்பெருமானே உள்ளதாலும், ப்ரபன்னன் எப்போதும் உபாயமாகவே எம்பெருமானை எண்ணியபடி இருக்க வேண்டும். மேலும், தன்னைக் காப்பாற்றும் அனைத்து பொறுப்புகளையும் எம்பெருமானிடம் கொடுத்து, சரணாகதி செய்துவிட்டதால், வேறு உபாயத்தை நாடாமல் எம்பெருமானையே உபாயம் என்று எண்ணியபடி இருக்கவேண்டும். உபாயம் என்றால் “ஒரு இலக்கை அடைவதற்கான வழி” என்பதாகும். இந்த வழியானது சேதனமாகவும், அசேதனமாகவும் இருக்கலாம். அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை (37-28) - ரக்ஷிஷ்யதீதீ விச்வாஸோ கோப்த்ருத்வவரணம் ததா – ரக்ஷிப்பான் என்ற நம்பிக்கை, ரக்ஷிக்கவேண்டும் என்னும் விண்ணப்பம் ஆகிய இரண்டும் லக்ஷ்மீ தந்த்ரம் (17-78) - ஸர்வஜ்ஞ: அபி ஹி விச்வேசா: ஸதா காருணிகோ அபி ஸந் ஸம்ஸாரதந்த்ர வாஹித்வாத் ரக்ஷாபேக்ஷாம் ப்ரதீக்ஷதே – அனைத்தையும் நியமிப்பவனாகவும், அனைத்தும் அறிந்தவனாகவும், மிகுந்த கருணை உள்ளவனாகவும் இருந்தாலும் ஸம்ஸாரத்தை வழிநடத்துபவன் ஆகையால் “ரக்ஷிக்கவேண்டும்” என்னும் விண்ணப்பத்தை எதிர்பார்க்கிறான். இங்கு உபாயமாக சேதனனாகிய எம்பெருமான் கூறப்பட்டதாலும், சேதனத்திற்கு மட்டுமே விண்ணப்பம் செய்யப்படவேண்டிய “ரக்ஷிக்கவேண்டும்” என்னும் விண்ணப்பம் அவசியமாக உள்ளதாலும் - த்வயத்தில் உள்ள “சரணம்” என்னும் பதம் உபாயத்தைக் குறித்தாலும், இங்கு அதே பதம் “ரக்ஷிக்கவேண்டும்” என்னும் விண்ணப்பத்தையும் குறிப்பதாக உள்ளது. ஆனால் சரணம் என்னும் பதம் த்வயத்தில் ஒரே முறை உபயோகப்படுத்தப்பட்டதால், அந்த ஒரு சொல்லானது மேலே கூறியபடி (உபாயம், விண்ணப்பம்) இரண்டு பொருள்களை அளிக்க இயலாது. எனவே சரணம் என்னும் பதம் எம்பெருமான் இந்த அதிகாரியான ப்ரபன்னனுக்கு உபாயம் என்பதைக் கூறுவதாகவும், இந்தப் பதத்தின் பொருள் மூலம் அனைத்து அதிகாரிகளுக்கும் ஏற்ற “ரக்ஷிக்கவேண்டும்” என்னும் விண்ணப்பம் கூறப்பட்டது என்றும் கொள்ளவேண்டும்.