Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம் (பத்தி 27)
அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம்
த்வயத்தில் மஹாவிச்வாஸம், கார்ப்பண்யம்
மூலம் – இப்படி புருஷகாராதி ஜ்ஞாத்தாலே பிறந்த விச்வாஸ மஹத்வமும் விச்வாஸ ஸ்வரூபமும் கார்ப்பண்யமும் ப்ரபத்யே என்கிற க்ரியாபதத்தில் உபஸர்க்கத்திலும், சரணசப்தோபலிஷ்டமான தாதுவிலும், உத்தமனிலும் அநுஸந்தேயங்கள். இதில் உத்தமனில் விவக்ஷிதத்தை அநந்யசரண: என்று கத்யத்திலே வ்யாக்யாநம் பண்ணினார்.
– பெரியபிராட்டியின் புருஷகாரம் முதலான பலவற்றால் பிறக்கின்ற மஹாவிச்வாஸத்தின் மேன்மை, இதன் ஸ்வரூபம், தன்னிடம் வேறு கதி இல்லை என்னும் எண்ணம் ஆகியவை த்வய மந்த்ரத்தில் ப்ரபத்யே என்பதில் உள்ள ப்ர என்பதிலும், சரணம் என்பதுடன் சேர்ந்து வருகின்ற ப்ரபத்யே என்பதில் உள்ள பத் என்னும் தாதுவிலும் (root), முதல் சுட்டுப் பொருளிலும் காணலாம். இதில் முதல் சுட்டும் பொருளில் உள்ள கருத்தையே எம்பெருமானார் சரணாகதி கத்யத்தில் – அநந்யசரண: - வேறு சரணம் இல்லை – என்று அருளிச் செய்தார்.