Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம் (பத்தி 26)

அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம்

அப்புள்ளாரின் விளக்கங்கள்

மூலம் – இவ்விடத்தில் ஸர்வேச்வரனுடைய பரத்வமாத்ரத்தை அறிந்து அகலுகையாலே நராதமனென்று பேர் பெற்ற பிறந்து கெட்டானிற் காட்டில் இடைச்சிகளைப்போலே விவேகமில்லையேயாகிலும் ஸௌலப்யத்தை அறிந்து அந்நலனுடையொருவனை நணுகுமவனே பரமாஸ்திகனென்று அப்புள்ளார் அருளிச்செய்யும் பாசுரம்.

– இங்கு அப்புள்ளார் கூறும் கருத்து கவனிக்கத் தக்கதாகும். ஒருவனுக்கு கோபிகைகள் போன்று விவேகம் இல்லை என்றாலும், எம்பெருமானின் எளிமையை அறிந்தவனாக, அந்த எளிமையைக் கொண்ட எம்பெருமானை அணுகுபவனாக இருந்தால் அவன் பரமாஸ்திகன் ஆகிறான். மாறாக, ஸர்வேச்வரனின் பரதத்துவ தன்மையை மட்டுமே கண்டு, அவனை அடையத் தகுதியில்லை என்று ஒதுங்குபவன் கீதையில் கூறப்பட்டபடி நராதமன் ஆகிறான். பரமாஸ்திகனுக்கு நராதமனைக் காட்டிலும் எம்பெருமானிடம் மஹாவிச்வாஸம் அதிகமே ஆகும்.