Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம் (பத்தி 24)

அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம்

ப்ரபத்தி குறித்த ஐந்து சந்தேகங்கள்

மூலம் – இப்படி யதாலோகம் பிறந்த சங்கைகளுக்கு யதாலோகம் பரிஹாரமுண்டாகையாலே யதாசாஸ்த்ரம் ப்ரபத்தி அபேக்ஷித ஸாதநமாகக் குறையில்லை.

– இப்படியாக ப்ரபத்தி குறித்து நாம் அன்றாடம் காணும் செயல்கள் குறித்து எழுந்த சந்தேகங்கள் அனைத்தும், அதே போன்று நாம் அன்றாடம் காணக்கூடிய செயல்கள் மூலமாகவே தீர்க்கப்பட்டன. ஆகவே சாஸ்த்ரங்களால் கூறப்படும் ப்ரபத்தி என்பது எம்பெருமானை அடைவதற்கான உபாயம் என்பதில் ஐயம் இல்லை.