Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம் (பத்தி 23)
அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம்
ப்ரபத்தி குறித்த ஐந்து சந்தேகங்கள்
மூலம் – ஸமாதிக தரித்ரனேயாகிலும் ஸ்வாதந்த்ரயாதி குணவிசிஷ்ட்டனாய் தன் ப்ரயோஜநமாக ஆச்ரிதருக்கு அபேக்ஷிதம் செய்கிறானாகையால் கோசல ஜநபதத்தில் ஜந்துக்களுக்குப்போலே, குமாரனோடொக்கத் திர்யக்கான கிளிக்குப் பாலூட்டுங் கணக்கிலே தரம் பாராதே கொடுக்கும்.
– இவனுக்கு மேலே யாரும் இல்லை, இவனைப் போன்றவர்களும் யாரும் இல்லை. இவன் ஸ்வதந்த்ரமானவன் ஆவான். ஆயினும், தன்னை அண்டியவர்களுக்கு, தனது மகிழ்ச்சிக்காகவும் பேற்றுக்காகவும், அவர்கள் விருப்பத்தின்படி நடக்கிறான். ஆகவே, இவன் யாருடைய உயர்வு தாழ்வுகளையும் பாராமல் உதவுகிறான். கோசல நாட்டில் இராமன் தன்னுடைய கிளிக்கு பாலூட்டும் அரசகுமாரன் தொடங்கி, தனது குழந்தைக்குப் பாலூட்டும் சாதாரண விலங்குகள் வரை அனைவரையும் ஒன்றாகவே நடத்தினான்.