Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம் (பத்தி 22)
அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம்
ப்ரபத்தி குறித்த ஐந்து சந்தேகங்கள்
மூலம் – க்ஷுத்ரதேவதைகளைப்போலே க்ஷிப்ரகாரியன்றாகிலும் மற்றுள்ள சாஸ்த்ரார்த்தங்களுக்கு விளம்பித்துப் பலங்கொடுத்தானேயாகிலும் அநந்யசரணனுடைய ப்ரபத்திக்கு ஔதார்யாதி குணஸஹிதமாய் ஸஹகார்யந்தர நிரபேக்ஷமான தன் ஸங்கல்பமாத்ரத்தாலே காக விபீஷணாதிகளுக்குப்போலே இவன் கோலின காலத்திலே அபேக்ஷிதம் கொடுக்கும்.
– இவன் சாதாரண தெய்வங்கள் போன்று உடனடியாகப் பலன் அளிப்பதில்லை. மற்ற சாஸ்த்ரங்களின் வழி நடப்பவனுக்குச் சற்று தாமதமாகவே பலன்கள் அளிக்கிறான். ஆனால், மற்ற உபாயங்கள் ஏதும் இல்லாமல், தன்னையே சரணம் என்று ப்ரபத்தி செய்தவர்கள் விரும்புவதை, சற்றும் காலம் தாழ்த்தாமல், உடனேயே அளித்துவிடுகிறான். இது இவனது ஔதார்யத்தையும், மற்றவர்களிடமிருந்து எந்த உதவியையும் எதிர்பாராமல் உள்ள குணங்களாலும் ஆகும். இதனை காகாசுரன், விபூஷணன் விஷயங்களில் காணலாம்.