Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம் (பத்தி 21)

அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம்

ப்ரபத்தி குறித்த ஐந்து சந்தேகங்கள்

மூலம் – அவாப்த ஸமஸ்த காமதையாலே ஸர்வோபகார நிரபேக்ஷனேயாகிலும் அல்பவ்யாஜத்தாலே வசீகார்யனான ஸுஜந ஸார்வபௌமனைப் போலே தன் நிரூபாதிக காருண்யாதிகளாலே இவன் செய்கிற சிலவான வ்யாபாரத்தைத் தனக்குப் பரிபோபகாரமாக ஆதரித்துக் கொண்டு க்ருதஜ்ஞனாய்க் கார்யம் செய்யும்.

– இவன் அடையவேண்டிய அனைத்தையும் பெற்றவனாக உள்ளபோதிலும், அவற்றைப் பெறுவதற்கு யாருடைய உதவியும் அவசியம் இல்லாதவனாக உள்ளபோதிலும் – எதனையும் எதிர்பாராமல் உள்ள தனது அளவு கடந்த கருணை காரணமாக, நாம் செய்யும் சிறியதான ப்ரபத்தி என்பதை, நாம் அவனுக்குச் செய்யும் மிகப்பெரிய பேறு என்று கொள்கிறான். சிறிய பரிசு கொடுத்தாலும் மகிழும் பேரரசர், பரிசு கொடுத்தவனுக்கு எண்ணற்ற உதவிகள் செய்வது போன்று இவன் உள்ளான்.