Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம் (பத்தி 20)
அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம்
ப்ரபத்தி குறித்த ஐந்து சந்தேகங்கள்
மூலம் - கர்மாநுரூப பலப்ரதனேயாகிலும் இப்ப்ரபத்திரூப வ்யாஜத்தாலே ப்ரஸந்நனாய் ஸ்வாமித்வ தாஸத்வ ஸம்பந்தோபோதிதமாய் தாயம் போலே ஸ்வத:ப்ராப்தமான அளவில்லாத பலத்தையும் தரும்.
– அவரவர்களின் கர்மங்களுக்கு ஏற்ப பலன் அளிப்பவனாக உள்ளபோதிலும், ப்ரபத்தி செய்வதன் மூலம் அதிக கருணை உள்ளவன் ஆகிறான். இதனால் அடையவேண்டிய பலனை விட அதிகமாகவே அளிக்கிறான். எஜமான-அடிமை உறவுக்கு ஏற்ப, தவறுகள் பல இழைத்தபோதிலும், அவர்கள் பிறப்புரிமையாக அடையப்பட வேண்டிய நன்மைகள் போன்று, இவன் நன்மைகள் செய்கிறான்.