Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம் (பத்தி 19)
அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம்
ப்ரபத்தி குறித்த ஐந்து சந்தேகங்கள்
மூலம் - ஸர்வஜ்ஞனாய் ஸர்வசக்தியாயிருந்தானேயாகிலும் மறுக்கவொண்ணாத புருஷகார விசேஷத்தாலே அந்த:புர பரிஜந விஷயத்திற்போலே அபிகந்தவ்யதா விரோதிகளான அபராதங்களையெல்லாம் க்ஷமித்து இவற்றில் அவிஜ்ஞாதா என்னும்படி நின்று அபிகந்தவ்யனாம்.
– எம்பெருமான் அனைத்தும் அறிந்தவனாகவும், அனைத்து சக்தியும் கொண்டவனாக உள்ளபோதிலும், பிராட்டியின் புருஷகாரத்தை மறுக்க இயலாமல் உள்ளான். அரசியின் வேலையாட்கள் செய்யும் தவறுகளை மன்னன் எப்படி பொறுத்துக் கொள்வானோ அது போன்று, தன்னை அடைய இயலாமல் தடுக்கின்ற குற்றங்களை பொறுத்துக் கொள்கிறான். இந்தத் தவறுகளைத் தான் காணாமல் உள்ளவன் போன்றே இருந்து, அனைவரும் தன்னிடம் வரும்படியாக நிற்பான்.