Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம் (பத்தி 17)

அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம்

சேஷியின் புருஷகாரம் போன்ற தன்மைகள்

மூலம் – இப்புருஷகாராதிகள் அஞ்சுக்கும் விசேஷங்களாவன – மறுக்கவொண்ணா மையும், ஒழிக்கவொழியாமையும், நிருபாதிகமாகையும், ஸஹகாரியைப் பார்த்திருக்க வேண்டாமையும், தண்ணியரான பிறருடைய பேறே தன் பேறாகையும்.

– பிராட்டியிடமிருந்து சிபாரிசாக (புருஷகாரமாக) எம்பெருமான் பெறுகின்ற விண்ணப்பங்கள் ஐந்து தன்மைகளுடன் கூடியிருக்கும். அவையாவன – பிராட்டி கூறுவதை மறுக்க இயலாமை, தன்னைச் சரணம் அடைந்தவர்களை தள்ள இயலாமை, எதனையும் எதிர்பாராமல் இருத்தல், சரணாகதி அடைவதற்கு வேறு எதனையும் எதிர்பாராமல் இருத்தல் மற்றும் சரணம் அடைந்தவர்களின் பலனைத் தனது பலனாகவே கொள்ளுதல் – என்பதாகும்.