Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம் (பத்தி 12)

அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம்

த்ரிஜடா சரணாகதி நிரூபணம்

மூலம் - இப்படி உபதேசிக்க ராக்ஷஸிகள் விலக்காதமட்டே பற்றாசாகப் பிராட்டி தன் வாத்ஸல்யாதிசயத்தாலே பவேயம் சரணம் ஹி வ: என்று அருளிச் செய்தாள். இப்பாசுரம் ஸஹ்ருதமாய் பலபர்யந்தமானபடியை, மாதர் மைதிலீ ராக்ஷஸீ: த்வயி ததைவ ஆர்த்ராபராதா: த்வயா ரக்ஷந்த்யா பவநாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா என்று அபியுக்தர் வெளியிட்டார்கள். இவ்விடத்தில் த்ரிஜடையுடைய ஆத்மாத்மீய பரஸமர்ப்பணத்திலே அவர்களுக்குப் பிறவித் துவக்காலே நம்மவர்களென்று கண்ணோட்டம் பிறக்கும் ராக்ஷஸிகளும் அந்தர்பூதைகள். அப்படியே ஸ்ரீவிபீஷணாழ்வானோடு கூட வந்த நாலு ராக்ஷஸரும் அவருடைய உபாயத்திலே அந்தர்பூதர்.

– இப்படியாக த்ரிஜடை கூறியதை அரக்கிகள் மறுக்கவில்லை. இப்படியாக இவர்கள் “சரணம் அடைகிறோம்” என்று வெளிப்படையாக கூறாத போதிலும், த்ரிஜடை கூறியதை மறுக்காமல் இருந்த காரணத்தையே அடிப்படையாகக் கொண்டு, தனது அளவு கடந்த அன்பு மற்றும் கருணை காரணமாக சீதை, இராமாயணம் ஸுந்தரகாண்டம் (58-90) – பவேயம் சரணம் ஹி வ: - நான் உங்களுக்கு அடைக்கலமாக இருக்கிறேன் – என்றாள்.இப்படியாக சீதை தனது மனப்பூர்வமாக கூறியதும், அதன் பலனையும் பராசரபட்டர் ஸ்ரீகுணரத்நகோசத்தில் (50) - மாதர் மைதிலீ ராக்ஷஸீ: த்வயி ததைவ ஆர்த்ராபராதா: த்வயா ரக்ஷந்த்யா பவநாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா – தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனாக உதித்த இராமன் தன்னைச் சரணம் என்று புகுந்த விபீஷணனையும், காகம் ஒன்றையும் மட்டுமே காப்பாற்றினான். நீயோ, பல தவறுகள் இழைத்த அரக்கிகளை, அவர்கள் உன்னிடத்தில் ”சரணம்” என்று புகாமலேயே காப்பாற்றினாய். இப்படியாக இராமனின் புகழ் சற்றுத் தாழ்ந்ததே ஆகும் – என்றார். த்ரிஜடையின் இந்தச் சரணாகதியில், த்ரிஜடையின் பாதுகாப்பு, அவளுடன் பிறந்த அரக்கிகளின் பாதுகாப்பு ஆகிய பலவும் அடக்கம் ஆகும். இது போன்று விபீஷணனுடன் வந்த நான்கு அரக்கர்களுக்கும் விபீஷணனின் சரணாகதி பொருந்தும்.