Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம் (பத்தி 11)

அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம்

த்ரிஜடா சரணாகதி நிரூபணம்

மூலம் - இவ்வைந்துக்கும் அங்கியான ஆத்ம நிக்ஷேபம், ப்ரணிபாத ப்ரஸந்நா ஹி மைதிலீ ஜநகாத்மஜா என்று ப்ரஸாத காரணவிசேஷத்தைச் சொல்லுகிற ப்ரணிபாத சப்தத்தாலே விவக்ஷிதமாயிற்று. ஆகையால் ந்யாஸ: பஞ்சாங்க ஸம்யுத: என்கிற சாஸ்த்ரார்த்தம் இங்கே பூர்ணம்.

ஆத்மசமர்ப்பணம் என்னும் அங்கியானது மேலே உள்ள ஐந்து அங்கங்களுடன் உள்ளதை ப்ரணிபாதம் (தலை வணங்குதல்) என்ற பதம் கூறுகிறது. இந்தப் பதம் எம்பெருமானுக்கும் பிராட்டிக்கும் கருணை உண்டாகக் காரணம் என்ன என்பதைத் தெளிவாக்குகிறது. இதனை இராமாயணம் ஸுந்தரகாண்டம் (27-45) - ப்ரணிபாத ப்ரஸந்நா ஹி மைதிலீ ஜநகாத்மஜா – ஜனகனின் திருமகளான சீதை நீங்கள் அவளிடம் செய்த ப்ரபத்தியால் உங்களுக்குக் கருணை செய்பவளாக உள்ளாள் – என்றது. ஆக, லக்ஷ்மீ தந்த்ரம் (17-74) – ந்யாஸ: பஞ்சாங்கம் ஸம்யுத: - ந்யாஸம் ஐந்து அங்கங்கள் கொண்டது – என்னும் கருத்து த்ரிஜடையின் சரணாகதியில் பூர்ணமாக வெளிப்படுகிறது.