Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம் (பத்தி 8)
அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம்
கோப்த்ருத்வ வாரணம்
மூலம் – ஸ்வரூபாநுசித புருஷார்த்தங்கள்போலே ஸ்வரூப ப்ராப்தமான அபவர்க்கமும் புருஷார்த்தமாம்போது புருஷன் அர்திக்கக் கொடுக்க வேண்டுகையாலே இங்கு கோப்த்ருத்வ வரணமும் அபேக்ஷிதம். நன்றாயிருப்பது ஒன்றையும் இப்புருஷன் அர்த்திக்கக் கொடாதபோது புருஷார்த்தங் கொடுத்தானாகானிறே. ஆகையாலேயிறே அப்ரார்த்திதோ ந கோபாயேத் என்றும், கோப்த்ருத்வ வரணம் நாம ஸ்வாபிப்ராய நிவேதநம் என்றும் சொல்லுகிறது.
– மோக்ஷம் என்பது நம்முடைய ஸ்வரூபத்திற்கு ஏற்ற குறிக்கோளாக உள்ளது. ஆனால், அதனை ஒரு புருஷார்த்தமாக விரும்பும்போது, மற்ற புருஷார்த்தங்கள் போன்று அதனையும் வேண்டியே பெற வேண்டியதாகிறது. இப்படியாக மோக்ஷம் என்பது யார் ஒருவன் அதனை வேண்டுகிறானோ அவனுக்கு மட்டுமே அளிக்கப்படுவதால், காப்பாற்றவேண்டும் என்பதும் வேண்டியே நிற்க வேண்டியதாகிறது. எந்த ஒரு நல்ல பொருளும், அதற்காக வேண்டாமல் அளிக்கப்படுவதில்லை. ஆக புருஷன் கேட்காதபோது மோக்ஷம் என்னும் புருஷார்த்தம் அளிக்கப்படுவதில்லை. இதனை லக்ஷ்மீ தந்த்ரம் கீழே உள்ள வரிகளில் கூறுகிறது: 17-72 - அப்ரார்த்திதோ ந கோபாயேத் – கேட்கப்படாமல் எந்த ரக்ஷகமும் அளிக்கப்படுவதில்லை. 17-78 - கோப்த்ருத்வ வரணம் நாம ஸ்வாபிப்ராய நிவேதநம் – நமது மனதில் உள்ளதை எம்பெருமானிடம் தெரிவித்தலே கோப்த்ருத்வ வரணம்.