Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம் (பத்தி 7)
அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம்
மஹாவிச்வாசம்
மூலம் – மஹாவிச்வாஸம் ரக்ஷிஷ்யதீதி விச்வாஸாத் அபீஷ்டோபாய கல்பநம் என்கிறபடியே அணியிடாத அநுஷ்டாந ஸித்தர்த்தமுமாய்ப் பின்பு நிர்பரதைக்கும் உறுப்பாயிருக்கும்.
– எந்தவிதமான ஐயமும் இல்லாத மஹாவிச்வாஸம் என்பது ப்ரபத்திக்கு மிகவும் அவசியமானதாகும். இத்தகைய மஹாவிச்வாஸம் என்பதே ப்ரபத்திக்குப் பின்னர் நம்மைப் பற்றிய கவலை கொள்ளுதல், நம்மைக் காத்துக் கொள்ள நாமே முயலுதல் போன்ற செயல்களில் இருந்து நம்மை விடுவிக்கிறது. இதனை லக்ஷ்மீ தந்த்ரம் (17-77) - மஹாவிச்வாஸம் ரக்ஷிஷ்யதீதி விச்வாஸாத் அபீஷ்டோபாய கல்பநம் – எம்பெருமான் ரக்ஷிப்பான் என்னும் நம்பிக்கை காரணமாக, எம்பெருமானை உபாயமாகக் கொள்ளும் பயன் கிட்டுகிறது – என்றது.