Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம் (பத்தி 6)

அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம்

கார்ப்பண்யம்

மூலம் – கார்ப்பண்யமாவது முன்பு சொன்ன ஆகிஞ்சந்யாதிகளுடைய அநுஸந்தானமாதல், அதடியாக வந்த கர்வஹாநியாதல், க்ருபாஜநக க்ருபணவ்ருத்தியாதலாய் நின்று சரண்யனுடைய காருண்யோத்தம்பநார்த்தமுமாய், கார்ப்பண்யேநாப்யுபாயாநாம் விநிவ்ருத்திரிஹேரிதா என்கிறபடியே பின்பும் அநந்யோபாயதைக்கும் உபயுக்தமாயிருக்கும்.

– கார்ப்பண்யம் என்றால் முன்பு கூறப்பட்ட ஆகிஞ்சந்யம் முதலானவற்றைக் குறித்து எண்ணியபடி இருத்தல், இந்த எண்ணங்கள் மூலமாகத் தனது கர்வம் நீங்குதல் என்பதாகும். இதன் மூலமாக தான் எந்தவிதமான உதவியும் அற்று (கதியும் அற்று) உள்ளோம் என்னும் எண்ணம் தோன்றும். இதன் மூலமாகத் தஞ்சம் புகுகின்ற எம்பெருமானின் கருணையானது பல மடங்கு பெருகுகிறது. இதன் மூலமாக வேறு எந்தவிதமான உபாயமும் இல்லை என்ற ஞானம் ஓங்குகிறது. லக்ஷ்மீதந்த்ரம் (17-77) - கார்ப்பண்யேநாப்யுபாயாநாம் விநிவ்ருத்திரிஹேரிதா – மற்ற உபாயங்களை நாடாமல் உள்ளதே கார்ப்பண்யம் – என்றது காண்க.