Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம் (பத்தி 5)

அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம்

ஆநுகூல்ய ஸங்கல்பம், ப்ரதிகூல்ய வர்ஜநம்

மூலம் – இங்குப் பரிகரங்களானவற்றில் ஆநுகூல்ய ஸங்கல்பத்துக்கும் ப்ரதிகூல்ய வர்ஜநத்துக்கும் நிபந்தனம், ஸர்வசேஷியான ஸ்ரீய:பதியைப் பற்றப் ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளாலே அபிமதாநுவர்த்தனம் பண்ணவேண்டும்படி இவனுக்கு உண்டான பாரார்த்ய ஜ்ஞாநம். இத்தாலே ஆநுகூல்யேதராப்யாம் து விநிவ்ருத்திரபாயத: என்கிறபடியே அபாய பரிஹாரம் ஸித்தம்.

– ப்ரபத்தியின் அங்கங்களில் எம்பெருமானுக்கு மகிழ்வை உண்டாக்கும் செயல்களை மட்டுமே செய்தல், அவனுக்கு விருப்பம் இல்லாத செயல்களைக் கைவிடுதல் என்பது காண்க. இதன் மூலம் மஹாலக்ஷ்மியின் நாயகனான எம்பெருமானுக்காகவே அனைத்து உயிர்களும் உள்ளன என்னும் ஞானம் பிறக்கிறது (சேஷத்வ ஞானம்). ஆகவே எத்தகைய செயல்களைச் செய்தால் அவன் மகிழ்வானோ, எதனைக் கைவிட்டால் அவன் மகிழ்வானோ அவற்றை மட்டுமே கடைபிடிக்க வேண்டும். லக்ஷ்மீதந்த்ரம் (17-76) - ஆநுகூல்யேதராப்யாம் து விநிவ்ருத்திரபாயத: என்கிறபடியே அபாய பரிஹாரம் – அவனுக்கு விருப்பமானவற்றைச் செய்தல், அவனுக்கு விருப்பம் இல்லாதவற்றைத் துறத்தல் என்பதன் மூலம் அவனது ஆணைகளை மீறாமல் இருக்கும் நிலை உண்டாகிறது – என்று கூறியது.