Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம் (பத்தி 3)

அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம்

ப்ரபத்தியின் அங்கங்கள்

மூலம் – இவ்விடத்தில் ஆநுகூல்யஸ்ய ஸங்கல்ப: ப்ரதிகூல்யஸ்ய வர்ஜநம் ரக்ஷிப்யதீதி விச்வாஸோ கோப்த்ருத்வவரணம் ததா ஆத்மநிக்ஷேப கார்ப்பண்யே ஷட்விதா சரணாகதி: இத்யாதிகளிற் சொல்லுகிற ஷாட்வித்யமும் அஷ்டாங்கயோகமென்னுமாப்போலே அங்க அங்கி ஸமுச்சயத்தாலே ஆகக்கடவதென்னுமிடமும், இவற்றில் இன்னது ஒன்றுமே அங்கி, இதரங்கள் அங்கங்களென்னுமிடமும், நிக்ஷேபாபரபர்யாயோ ந்யாஸ: பஞ்சாங்க ஸம்யுத: ஸந்ந்யாஸஸ்த்யாக இத்யுக்த: சரணாகதிரித்யபி என்கிற ச்லோகத்தாலே ந்யாய நிரபேக்ஷமாக ஸித்தம்.

– அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை சரணாகதி என்பது ஆறு வகை என்பதை - ஆநுகூல்யஸ்ய ஸங்கல்ப: ப்ரதிகூல்யஸ்ய வர்ஜநம் ரக்ஷிப்யதீதி விச்வாஸோ கோப்த்ருத்வவரணம் ததா ஆத்மநிக்ஷேப கார்ப்பண்யே ஷட்விதா சரணாகதி: - அவனுக்கு மகிழ்வை உண்டாக்குவதை மட்டுமே செய்வேன் என்ற எண்ணம், அவனுக்கு விருப்பம் இல்லாதவற்றை கைவிடுதல், அவன் எப்போதும் காப்பான் என்ற திடமான நம்பிக்கை, ரக்ஷிக்க வேண்டும் என்று விண்ணப்பம் செய்தல், ஆத்ம ஸ்வரூபத்தை ஸமர்ப்பணம் செய்தல், வேறு கதியற்றவன் என்ற எண்ணம் – என்று கூறியது. அஷ்டாங்க யோகத்தில் அங்கியான ஸமாதி நிலையையும் சேர்த்து எட்டு என்பது போன்று, இங்கு அங்கியான ப்ரபத்தியையும் சேர்த்து ஆறு வகை என்பது காண்க (அதாவது – அஷ்டாங்க யோகம் என்பது யமம், நியமம், ஆசனம், ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம், த்யானம், தாரணம் என்னும் ஏழு அங்கங்களுடன் அங்கியான ஸமாதியையும் சேர்த்து எட்டு எனப்படுகிறது. இது போன்று இங்கு சரணாகதி என்பது ஆநுகூல்யஸங்கல்பம், ப்ரதிகூல்யவர்ஜனம், கார்பண்யம், மஹாவிச்வாஸம், கோப்த்ருத்வவரணம் என்னும் ஐந்து அங்கங்களுடன் அங்கியான ஆத்மஸமர்ப்பணமும் சேர்த்து ஆறு எனப்படுகிறது). இந்த ஆறில் ஒன்று அங்கி என்றும், மற்ற ஐந்தும் அங்கங்கள் என்றும் லக்ஷ்மீ தந்த்ரம் (17-74) - நிக்ஷேபாபரபர்யாயோ ந்யாஸ: பஞ்சாங்க ஸம்யுத: ஸந்ந்யாஸஸ்த்யாக இத்யுக்த: சரணாகதிரித்யபி – ஐந்து அங்கங்களுடன் கூடிய ஸமர்ப்பணம் என்னும் ந்யாஸம் என்பதே ஸந்ந்யாஸம் என்றும், த்யாகம் என்றும், சரணாகதி என்றும் கூறப்படுகிறது – என்று கூறியது.