Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம் (பத்தி 2)
அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம்
ப்ரபத்தியின் அங்கங்கள்
மூலம் - இவ்வித்யைக்குப் பரிகரமாவது ஆநுகூல்யஸங்கல்பமும், ப்ரதிகூல்யவர்ஜனமும், கார்பண்யமும், மஹாவிச்வாஸமும், கோப்த்ருத்வவரணமும்.
– ப்ரபத்தி அல்லது ந்யாஸவித்யை எனப்படும் இந்த வித்யைக்குக் கீழே உள்ள பலவும் அங்கங்கள் ஆகும் – எம்பெருமானுக்கு ஏற்புடையவற்றை மட்டுமே செய்தல், அவனுக்கு விருப்பம் இல்லாதவற்றைத் தவிர்த்தல், உதவியற்று இருத்தல், மஹாவிச்வாஸம் மற்றும் அவனது ரக்ஷகத்தை விண்ணப்பித்தல்.