Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம் (பத்தி 1)
அர்த்தாநுசாஸந பாகம் – 11.பரிகரவிபாகாதிகாரம்
இயாந் இத்தம்பூத: ஸக்ருத் அயம் அவச்யம்பவநவாந் தயா திவ்ய அம்போதௌ ஜகத் அகிலம் அந்த: யமயதி பவ த்வம்ஸ உத்யுக்தே பகவதி பரந்யாஸ வபுஷ: பரபத்தே: ஆதிஷ்ட: பரிகர விசேஷ: ச்ருதிமுகை:
– கருணைக் கடலாக உள்ளவன், அனைத்து உலகங்களையும், அவற்றின் ஆத்மாவாக இருந்து நியமிப்பவன், ஸம்ஸாரத்தை அழிப்பதற்கு எப்போதும் ஆயத்தமாக உள்ளவன் ஸர்வேச்வரன் ஆவான். இப்படிப்பட்ட அவனிடம் அனைத்துவிதமான பொறுப்புகளையும் ஸமர்ப்பணம் செய்வதையே ஸ்வரூபமாகக் கொண்டது ப்ரபத்தி ஆகும். ப்ரபத்தியின் அங்கங்கள் குறித்து வேதங்கள் - அங்கங்கள் இன்னவை என்றும், இத்தனை என்றும், அங்கங்களின் ஸ்வரூபம் இவை என்றும், அங்கங்களின் பயன் இவை என்றும், ஒருமுறை ப்ரபத்தி இயற்றப்படும்போது இந்தந்த அங்கங்கள் இருக்கவேண்டும் என்றும் – விதித்துள்ளன.