Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 10.ப்ரபத்தி யோக்ய அதிகாரம் (பத்தி 9)

அர்த்தாநுசாஸந பாகம் – 10.ப்ரபத்தி யோக்ய அதிகாரம்

பக்த்யாதௌ சக்தி அபாவ: ப்ரமிதி ரஹிததா சாஸ்த்ரத: பர்யுதாஸ: காலக்ஷேப அக்ஷபத்வம் த்விதி நியதிவசாத் ஆபதப்தி: சதுர்பி: ஏக த்வி த்ரி ஆதியோக வ்யதிபிதுர நிஜ அதிக்ரியா: ஸம்ச்ரயந்தே ஸந்த: ஸ்ரீசம் ஸ்வதந்த்ர ப்ரபதந விதிநா முக்த்யே நிர்விசங்கா:

– பக்தியோகம் முதலான உபாயங்களைப் பின்பற்ற சக்தி இல்லாமை, இவற்றைப் பற்றிய ஞானம் இல்லாமை, இவற்றை இயற்றத் தகுதி இல்லாதவன் என்று சாஸ்த்ரங்களால் விலக்கப்படுதல், மோக்ஷம் பெறும் காலம் தாமதமாக வருவதைப் பொறுத்துக் கொள்ள இயலாமை – இவற்றில் ஒன்றோ, இரண்டோ, மூன்றோ அல்லது நான்குமோ அமைவது என்பது பூர்வபயனால் ஆகும். இவை மஹாலக்ஷ்மியின் பதியாகிய எம்பெருமானை ப்ரபத்தி மூலமாக அடைவதற்கான பல தகுதிகள் ஆகின்றன. அறிந்தவர்கள் இவற்றைக் கொண்டு, மோக்ஷம் பெறுவதில் எந்தவிதமான ஐயமும் இல்லாமல் எம்பெருமானை அண்டி நிற்கின்றனர்.