Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 10.ப்ரபத்தி யோக்ய அதிகாரம் (பத்தி 6)
அர்த்தாநுசாஸந பாகம் – 10.ப்ரபத்தி யோக்ய அதிகாரம்
ப்ரபத்திக்கு ப்ரமாணங்கள்
மூலம் – இப்ப்ரபத்யாதிகார விசேஷம் : ஸ பித்ரா ச பரித்யக்தஸ்ஸுரைச்ச ஸமஹர்ஷிபி: த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத:, அஹமஸ்ம்யபராதாநாமாலய: அகிஞ்சந: அகதி:, ஆகிஞ்சந: அநந்யகதி: சரண்ய, அநாகதாநந்தகால ஸமீக்ஷயாப்யத்ருஷ்ட ஸந்தாரோபாய:, தத்ப்ராப்த்யே ச தத்பாதாம்புஜத்வய ப்ரபத்தேரந்யந்ந மே கல்பகோடி ஸஹஸ்ரேணாபி ஸாதநமஸ்தீதி மந்வாந:, புகலொன்றில்லா அடியேன் என்றிவை முதலான ப்ரமாண ஸம்ப்ரதாயங்களாலே ஸித்தம்.
– ப்ரபத்திக்கு இருக்கின்ற அதிகாரம் குறித்து கீழே உள்ள பல வரிகள் ப்ரமாணங்களாக உள்ளன: இராமாயணம் ஸுந்தரகாண்டம் (38-33) - ஸ பித்ரா ச பரித்யக்தஸ்ஸுரைச்ச ஸமஹர்ஷிபி: த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத: - காகமானது தனது தந்தையான இந்த்ரன், தேவர்கள், ரிஷிகள் போன்ற பலராலும் கைவிடப்பட்டு, மூன்று உலகங்களுக்கும் சென்று, இறுதியாக இராமனிடமே சரணம் அடைந்தது. அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை (37-30) - அஹமஸ்ம்யபராதாநாமாலய: அகிஞ்சந: அகதி: - தவறுகளுக்கு இருப்பிடமாக உள்ள என்னைக் காப்பாற்ற வேறு புகலிடம் இல்லை, உன்னைத் தவிர அடைவதற்கு வேறு இடம் இல்லை. ஸ்தோத்ர ரத்னம் (22) - ஆகிஞ்சந: அநந்யகதி: சரண்ய – உன்னிடமே சரணம் அடைகிறேன், என்னக்கு உன்னைவிட்டால் சரணம் அடையும் இடம் இல்லை. ஸ்ரீரங்க கத்யம் (2) - அநாகதாநந்தகால ஸமீக்ஷயாப்யத்ருஷ்ட ஸந்தாரோபாய: - எல்லையற்ற ஸம்ஸாரம் என்பது எதிர்காலங்களிலும் உள்ளது, அதனைக் கடக்க உன்னைத் தவிர வேறு உபாயம் இல்லாதவனாக உள்ளேன். ஸ்ரீவைகுண்ட கத்யம் - தத்ப்ராப்த்யே ச தத்பாதாம்புஜத்வய ப்ரபத்தேரந்யந்ந மே கல்பகோடி ஸஹஸ்ரேணாபி ஸாதநமஸ்தீதி மந்வாந: - ஆயிரம் கோடி கல்ப காலங்களிலும், அவனது அழகான இரண்டு தாமரைத் திருவடிகளைக் காட்டிலும் சரணம் அடைய வேறு இடம் இல்லை என்று நான் அறிவேன். திருவாய்மொழி (6-10-10) - புகலொன்றில்லா அடியேன் – வேறு புகலிடம் இல்லாத நான்.