Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 10.ப்ரபத்தி யோக்ய அதிகாரம் (பத்தி 5)
அர்த்தாநுசாஸந பாகம் – 10.ப்ரபத்தி யோக்ய அதிகாரம்
ஆகிஞ்சந்யம் – அநந்யகதித்வம் இவற்றின் காரணம்
மூலம் – இவ் ஆகிஞ்சந்யத்துக்கும் அநந்யகதித்வத்துக்கும் நிபந்தனம் உபயாந்தரங்களில் இவ்வதிகாரியினுடைய அஜ்ஞான அசக்திகளும் பலவிளம்ப அஸஹத்வமும். இதில் சரண்யாந்தர வைமுக்யத்துக்கு நிபந்தனம்: யதா வாயோஸ்த்ருணாக்ராணி வசம் யாந்தி பலீயஸ: தாதுரேவ வசம் யாந்தி ஸர்வபூதாநி பாரத என்கிறபடியே தனக்கும் பிறருக்குமொத்திருக்கிற பகவதேக பாரதந்த்ர்யாத்யவ ஸாயமும் ப்ரயோஜநாந்தர வைமுக்யமும்.
– மற்ற உபாயங்களில் ஈடுபட இயலாமையும், அவற்றைப் பற்றி அறியாமையும், மோக்ஷம் தாமதிப்பதைப் பொறுத்துக் கொள்ள இயலாமையும் ஆகிஞ்சந்யம் மற்றும் அநந்யகதித்வம் வளர்வதற்கான காரணங்கள் ஆகின்றன. எம்பெருமானை மட்டுமே நம்பி இருத்தல் என்பது, மற்றவர்களிடம் உள்ளது போன்றே ஒருவனுக்கு, “எம்பெருமானே அனைத்தும்”, என்ற சிந்தனையை வளர்க்கிறது. இதனை மஹாபாரதம் உத்யோகபர்வம் (26-29) - யதா வாயோஸ்த்ருணாக்ராணி வசம் யாந்தி பலீயஸ: தாதுரேவ வசம் யாந்தி ஸர்வபூதாநி பாரத – பாரதனே! புல்லின் நுனிகள் என்பவை, பலமாக வீசும் காற்றின் வசம் உள்ளன; இது போன்று, அனைத்து உயிர்களும் உலகைப் படைத்த ஸர்வேச்வரன் வசம் உள்ளன – என்றது.