Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 10.ப்ரபத்தி யோக்ய அதிகாரம் (பத்தி 4)

அர்த்தாநுசாஸந பாகம் – 10.ப்ரபத்தி யோக்ய அதிகாரம்

ஆகிஞ்சந்யம் – அநந்யகதித்வம் என்பதன் விளக்கம்

மூலம் – தீவ்ரதமமான முமுக்ஷுத்வமின்றிக்கே தேஹாநுவ்ருத்யாதி ப்ரயோஜநாந்தர ஸக்தனானவன் மோக்ஷார்த்தமாக ப்ரபத்தியைப் பற்றினால் அவ்வோ ப்ரயோஜநாந்தரங்களின் அளவுக்கு ஈடாக மோக்ஷம் விளம்பிக்கும்.

– ஒருவன் மோக்ஷம் அடைவதில் ஆழ்ந்த விருப்பம் இல்லாமல், தனது உடல் நீண்ட நாள் இருக்கவேண்டும் போன்ற அற்பமான பலன்களை எண்ணியபடியும் ப்ரபத்தியில் ஈடுபடக்கூடும். இப்படிப்பட்டவனுக்கு, அந்தப் பலன்களுக்கு ஏற்றாப்போல் மோக்ஷ காலம் என்பது தாமதிக்கும்.