Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 10.ப்ரபத்தி யோக்ய அதிகாரம் (பத்தி 1)

அர்த்தாநுசாஸந பாகம் – 10.ப்ரபத்தி யோக்ய அதிகாரம்

அர்த்தித்வேந ஸமர்த்ததா த்ரிகதநு: ஸம்பிண்டிதா: அதிக்ரியா ஸா சாஷ்டாங்க ஷடங்க யோக நியதாவஸ்தா வ்யவஸ்தாபிதா ச்ரோதீ ஸர்வ சரண்யதா பகவத: ஸ்ம்ருத்யா அபி ஸத்யாபிதா ஸத்யாதிஷு இவ நைகமேஷு அதிக்ருதி: ஸர்வ ஆஸ்பதே ஸத்பதே.

– ஒரு பலனைப் பெறுவதற்கான உபாயத்தில் ஈடுபடும் அதிகாரம் (தகுதி) என்பது அந்தப் பலனில் ஆசை கொண்டிருப்பதுடன், மூன்றுவிதமான ஸ்வரூபங்களைக் கொண்ட திறமை ஆகியவற்றைப் பொறுத்தே உண்டாகிறது. இவற்றில் பக்தி யோகத்திற்கு எட்டு அங்கங்களும், ப்ரபத்திக்கு ஆறு அங்கங்களும் கூறப்பட்டுள்ளன. எம்பெருமானே அனைத்து உயிர்களும் சரணம் புகும் இடமாக உள்ளான் என்று ச்ருதிகள் கூறுவதை, ஸ்ம்ருதிகளும் உறுதியாகக் கூறுகின்றன. வேதங்களில் கூறப்படும் “உண்மையை மட்டுமே பேசுதல்” என்பது போன்ற தகுதிகள் அனைவருக்கும் பொதுவாக உள்ளது போன்று, ப்ரபத்தி என்பதும் அனைவருக்கும் பொதுவாகவே உள்ளது.