Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 9.உபாயவிபாகாதிகாரம் (பத்தி 20)
அர்த்தாநுசாஸந பாகம் – 9.உபாயவிபாகாதிகாரம்
கர்ம ஞானம் உபாஸநம் சரணவ்ரஜ்யா இதி ச அவஸ்திதாந் ஸந்மார்க்காந் அபவர்க்க ஸாதந வித்யௌ ஸத்வாரக அத்வாரகாந் ஏகத்வி ஆக்ருதி யோக ஸம்ப்ருத ப்ருதக்பாவ அநுபாவாந் இமாந் ஸம்யக் ப்ரேக்ஷ்ய சரண்ய ஸரதி கிராமந்தி ரமந்தி புதா:
– கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் மற்றும் சரணாகதி ஆகிய நான்கும் மோக்ஷ உபாயங்கள் என சாஸ்த்ரங்கள் கூறுகின்றன. இவற்றில் சில நேரடியாக மோக்ஷம் அளிக்கவல்லவை, ஒரு சில மறைமுகமாக அளிக்கவல்லவை ஆகும். இவற்றில் கர்மயோகம் மற்றும் ஞானயோகம் ஆகியவை ஒரு வழியில் மட்டுமே மோக்ஷ உபாயமாக உள்ளன. இவை மறைமுகமாக மோக்ஷம் அளிப்பவை ஆகும். பக்தியோகம் நேரடியாகப் பலன் அளிப்பதாகும். ப்ரபத்தி என்பது தானே நேரடியாகவும், பக்தியோகத்தைத் தூண்டி மறைமுகமாகவும் பலன் அளிப்பதாகும். இப்படியாக இரு வழிகளில் மோக்ஷம் அளிக்கவல்ல உபாயமாக இருக்கும் மேன்மை ப்ரபத்திக்கு மட்டுமே உண்டு. இந்த உண்மையை அறிந்தவர்கள் இதனைக் கடைபிடிக்கிறார்கள்.