Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 9.உபாயவிபாகாதிகாரம் (பத்தி 19)
அர்த்தாநுசாஸந பாகம் – 9.உபாயவிபாகாதிகாரம்
நின்ற நிலைக்கு உறநிற்கும் கருமமும் நேர்மதியால் நன்று என நாடிய ஞானமும் நல்கும் உள்கண் உடையார் ஒன்றிய பத்தியும் ஒன்றும் இலா விரைவார்க்கு அருளால் அன்று பயன் தரும் ஆறும் அறிந்தவர் அந்தணரே
– வர்ணாச்ரம தர்மத்திற்கு ஏற்றபடியான கர்மயோகம் இயற்றல்; ஞானயோகத்தை அதன் பலனை முழுவதுமாக அறிந்த ஞானத்துடன் இயற்றல்; ஆத்மஸாக்ஷாத்காரத்துடன் ஐக்கியமான பக்தியோகம் இயற்றல்; மேலே உள்ள தகுதி அற்றவர்கள், மோக்ஷ காலம் தாமதிப்பதைப் பொறுத்துக் கொள்ளாதவர்கள் ஆகியவர்களுக்கு எம்பெருமானின் கருணை மூலமாக விரைந்து பலன் அளிக்கவல்ல ப்ரபத்தி – இவை நான்கும் அறிந்தவர்கள், வேதம் முழுவதையும் கற்ற அந்தணர்கள் ஆவர்.