Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 9.உபாயவிபாகாதிகாரம் (பத்தி 17)
அர்த்தாநுசாஸந பாகம் – 9.உபாயவிபாகாதிகாரம்
ப்ரபத்தி ப்ரஹ்மவித்யையில் ஒன்று
மூலம் – இப்படி ப்ரபத்திக்கும் பக்திக்கும் அதிகாரி விசேஷத்தைப் பற்றித் துல்யபலத்வம் உண்டாகையாலே விகல்பமாகக் கடவது. இவற்றுக்கு நாநாசப்தாதி பேதாத் என்கிற அதிகரணத்திலே பேதம் ஸித்தம். விகல்போ அவிசிஷ்டபலத்வாத் என்கிற அதிகரணத்திலே விகல்பமும் ஸித்தம்.
– ஆக ஒருவரது தகுதியைப் பொறுத்து ப்ரபத்தி மற்றும் பக்தி என்பது அமைகின்றது. இவை இரண்டும் வெவ்வேறு என்பதை ப்ரஹ்மஸூத்ரம் இவற்றை வெவ்வேறு அதிகரணங்களில் கூறியிருப்பதன் மூலம் உணரலாம். இவற்றுக்கு இடையே வேறுபாடு உள்ளது என்பதை ப்ரஹ்மஸூத்ரம் (3-3-56) - நாநாசப்தாதி பேதாத் – பெயர் முதலானவை வேறுபட்டுள்ளதால், வேறுபாடு உண்டு – என்று கூறியது. இவை இரண்டில் எதனை வேண்டுமானாலும் கைக்கொள்ளலாம் என்பதை ப்ரஹ்மஸூத்ரம் (3-3-57) - விகல்போ அவிசிஷ்டபலத்வாத் – மோக்ஷம் என்னும் ஒரே பலன் உள்ளதால் எதனையும் கைக்கொள்ளலாம் – என்றது.