Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 9.உபாயவிபாகாதிகாரம் (பத்தி 15)
அர்த்தாநுசாஸந பாகம் – 9.உபாயவிபாகாதிகாரம்
பரமபக்தி எவ்விதம் மோக்ஷம் கிட்டச் செய்கிறது
மூலம் - இது முனியே நான்முகனிற்படியே ஸங்கோசமற அநுபவித்தல்லது தரிக்கவொண்ணாத அபிநிவேசத்தை உண்டாக்கி மறுக்கவொண்ணாத திருவாணையிட்டு வளைத்துக் கூப்பிடுகையாலே இவனுக்குக் கடுகப் ப்ராப்தியைக் கொடுக்கும்படி ஸர்வேச்வரனுக்குத் த்வராதிசயத்தை உண்டாக்கி இவனை அவாவற்று வீடு பெறப்பண்ணும்.
– பரமபக்தி என்பது எந்தவிதமான தடைகளும் இல்லாமல் எம்பெருமானை அனுபவிக்கவேண்டும் என்னும் ஆசையையும் உறுதியையும் ஏற்படுத்தும். அதன் பின்னர் பக்தன், எம்பெருமானின் அனுபவம் இல்லாமல் தன்னால் உயிர் வாழ இயலாது என்ற நிலைக்கு வருகிறான். இதனைத் திருவாய்மொழியில் (10-10-1) – முனியே நான்முகனே – என்பதன் மூலம் காணலாம். அவன் எம்பெருமானுடன் கலந்து நிற்கவேண்டும் என்று எண்ணி, தனது எண்ணத்தை எம்பெருமான் முன்னிலையில் ஆணையாகவே இடுகிறான். இதனை எம்பெருமானால் மறுக்க இயலாது.இதன் மூலம் எம்பெருமானுக்கும் அந்த பக்தன் மீது அளவற்ற அன்பு உண்டாகிறது. அதனால் மோக்ஷம் கிட்டும்படிச் செய்து, தன்னுடன் எப்போதும் நிலைக்கும்படிச் செய்கிறான்.