Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 9.உபாயவிபாகாதிகாரம் (பத்தி 14)
அர்த்தாநுசாஸந பாகம் – 9.உபாயவிபாகாதிகாரம்
பக்தி – பரபக்தி – பரஜ்ஞாந – பரமபக்தி என்றால் என்ன
மூலம் - இப்படி நிரதிசய போக்யமான பகவத்ஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரித்தவாறே பெருவிடாய்ப்பட்டவன் தடாகத்தைக் கண்டாற் போலே பிறந்த ப்ரீத்யதிசயம் பரமபக்தி.
– அளவு கடந்த தாகம் கொண்டவன் நீர்நிலையைக் கண்டால் எத்தனை மகிழ்வு கொள்ளுவான்? இது போன்று, எம்பெருமானை கண்டவன் அவன் மீது அளவு கடந்த ப்ரியம் கொள்கிறான். இதுவே பரமபக்தி எனப்படும்.