Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 9.உபாயவிபாகாதிகாரம் (பத்தி 12)

அர்த்தாநுசாஸந பாகம் – 9.உபாயவிபாகாதிகாரம்

பக்தி – பரபக்தி – பரஜ்ஞாந – பரமபக்தி என்றால் என்ன

மூலம் - இப்படி மோக்ஷோபாயமாக விதித்த பக்தியோகம் பரபக்தியென்று பேசப்பட்டது. இதினுடைய ஹேதுவாய் ஸாத்விக பரிசீலநாதிகளாலே வந்த பகவத் விஷயத்தில் ப்ரீதிவிசேஷம் ஸர்வேச்வரனைத் தெளியவறிய வேணுமென்னும் அபிநிவேசத்துக்குக் காரணமாய் பக்தியென்று பேர் பெற்றிருக்கும்.

– இப்படியாக மோக்ஷத்திற்கு உபாயமாக உள்ள பக்தியோகம் என்பது பரபக்தி எனப்படும். ஸாத்வீகமான மனிதர்களின் தொடர்பு காரணமாக எம்பெருமான் மீது உண்டாகும் அளவு கடந்த அன்பும், பரபக்தியை உண்டாக்குவதும் பக்தி எனப்படும். இதன் காரணம் – இதுவே எம்பெருமானை எந்தவித ஐயமும் இல்லாமல் அறிவதற்கான ஆசையைத் தூண்டுவதாகும்.