Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 9.உபாயவிபாகாதிகாரம் (பத்தி 11)

அர்த்தாநுசாஸந பாகம் – 9.உபாயவிபாகாதிகாரம்

ஞானியின் உயர்வு

மூலம் - அவ்விடத்தில் தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த ஏகபக்திர்விசிஷ்யதே என்று தொடங்கிச் சொன்ன ஞானியினுடைய ஏற்றத்தை சதுர்விதா மம ஜநா பக்தா ஏவ ஹி தே ஸ்ம்ருதா: ஏஷாமேகாந்திந: ச்ரேஷ்டா: தே சைவாநந்யதேவதா: அஹமேவ கதிஸ்தேஷாம் நிராசீ: கர்மகாரிணாம் யே து சிஷ்டாத்ரயோ பக்தா: பலகாம ஹி தே மதா: ஸர்வே ச்யவநதர்மாண: ப்ரதிபுத்தஸ்து மோக்ஷபாக் என்று தானே வெளியிட்டான்.

– நான்குவிதமான மனிதர்களில் ஞானியின் ஏற்றத்தை கீதை (7-17) - தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த ஏகபக்திர்விசிஷ்யதே – இவர்களில் ஞானியானவன் எம்பெருமானிடம் எப்போதும் இருப்பதையே விரும்புவதாலும், அவனுக்காக மட்டுமே வாழ்வதாலும், அவனுக்கு மட்டுமே தொண்டு செய்வதாலும் சிறந்தவன் – என்றது. இதனையே எம்பெருமான் மஹாபாரதம் சாந்திபர்வத்தில் - சதுர்விதா மம ஜநா பக்தா ஏவ ஹி தே ஸ்ம்ருதா: ஏஷாமேகாந்திந: ச்ரேஷ்டா: தே சைவாநந்யதேவதா: அஹமேவ கதிஸ்தேஷாம் நிராசீ: கர்மகாரிணாம் யே து சிஷ்டாத்ரயோ பக்தா: பலகாம ஹி தே மதா: ஸர்வே ச்யவநதர்மாண: ப்ரதிபுத்தஸ்து மோக்ஷபாக் – என்னுடைய பக்தர்கள் நான்கு வகை ஆவர்; அவர்களில் என்னைத் தவிர மற்ற தேவதைகளை நாடாமல் உள்ளவர்களே சிறந்தவர்கள்; அவர்கள் தங்களுடைய கர்மங்களை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்கின்றனர்; என்னை அடைவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டுள்ளனர்; மற்ற மூவரும் உலகவிஷயங்களைப் பலனாக எதிர்பார்ப்பதால், நழுவ வாய்ப்புள்ளது; என்னை மட்டுமே வணங்கியபடி உள்ள புத்திமான் மோக்ஷம் பெறுகிறான் – என்று கூறினான்.