Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 9.உபாயவிபாகாதிகாரம் (பத்தி 10)

அர்த்தாநுசாஸந பாகம் – 9.உபாயவிபாகாதிகாரம்

பக்தியோகம் ஐச்வர்யத்தை அளித்தல்

மூலம் - இப்பக்தியோகந்தானே ப்ரத்யயார்த்தம் ச மோக்ஷஸ்ய ஸித்தய: ஸம்ப்ரகீர்த்திதா: என்கிறபடியே இளநெஞ்சரைத் தேற்றுகைக்கு இட்ட விரகான வழியில் காமநா பேதத்தாலே ஐச்வர்யாதிகளுக்கும் ஸாதனமென்னும் இவ்வர்த்தம் சதுர்விதா பஜந்தே மாம் என்று சொல்லப்பட்டது.

– பக்தியோகமாவது உலகவிஷயங்களை அடைவதற்கும், கைவல்யம் போன்றவற்றுக்கும் ஸாதனம் என்று கூறப்பட்டது. இந்த விஷயத்தை ஸத்வத ஸம்ஹிதை - ச மோக்ஷஸ்ய ஸித்தய: ஸம்ப்ரகீர்த்திதா: - பக்தியோகம் மூலம் உலகவிஷயங்களும் கிட்டும்; இவற்றின் மூலம், பக்தியோகம் மோக்ஷத்தை ஏற்படுத்தவல்லது என்ற நம்பிக்கை உண்டாகிறது – என்று கூறியது. இந்த வரியானது பக்தியோகத்தின் மீது தாழ்ந்தவர்களுக்கு நம்பிக்கை உண்டாக்குவதற்காக உள்ளது. இதனை கீதையும் (7-16) - சதுர்விதா பஜந்தே மாம் – நான்குவிதமான மனிதர்கள் என்னை வணங்குகின்றனர் – என்றது காண்க.