Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 9.உபாயவிபாகாதிகாரம் (பத்தி 9)

அர்த்தாநுசாஸந பாகம் – 9.உபாயவிபாகாதிகாரம்

வர்ணாச்ரமங்களின் அவசியம்

மூலம் - இதுக்கு வர்ணாச்ரம தர்மங்கள் ஜ்ஞாந விகாஸ ஹேதுவான ஸத்த்வாதி வ்ருத்திக்குக் களையான ரஜஸ்தமஸ்ஸுக்களுக்கு மூலமான பாபங்களைக் கழித்துக் கொண்டு இதிகர்த்தவ்யதையாயிருக்கும்.

– ஸத்வம் என்னும் பயிர் மேலோங்கி வளர்வதற்குக் களையாக ரஜஸ் மற்றும் தாமஸங்கள் உள்ளன. இவை உண்டாவதற்கு பாவங்களே காரணமாக இருக்கின்றன. இவை கழிந்து ஸத்வம் மேலோங்கினால் மட்டுமே ஞானம் செழிக்கும். இப்படிப்பட்ட பாவங்கள் கழிய அவரவர்களின் வர்ணாச்ரம தர்மங்களே வழியாகும். அவற்றின்படி கர்மம் இயற்றும்போது பாவங்கள் கழிகின்றன. இப்படியாக இந்த வர்ணாச்ரம தர்மங்கள் பக்திக்குத் துணையாக உள்ளன.