Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 9.உபாயவிபாகாதிகாரம் (பத்தி 5)
அர்த்தாநுசாஸந பாகம் – 9.உபாயவிபாகாதிகாரம்
பக்தருக்கும் ப்ரபந்நருக்கும் உபாய உபேயங்கள் பயன்படும் விதம்
மூலம் - இவ்வீச்வரனுடைய உபாயத்வம் அத்வாரக ப்ராப்திநிஷ்டன் பக்கல் உபாயாந்தர ஸ்தாந நிவேசத்தாலே விசிஷ்டமாய் இருக்கும். மற்ற அதிகாரிக்கும் கர்மயோகாரம்பம் முதலாக உபாஸநபூர்த்தி பர்யந்தமாக நடுவுள்ள கர்த்தவ்யங்களில் அத்யந்த அசக்த்யமான நேர்களிலே இப் ப்ரபத்தி வசீக்ருதனான ஈச்வரன் புகுந்து நின்று அந்த துஷ்கர கர்த்தவ்யங்களாலே வரும் பாபநிவ்ருத்தியையும் ஸத்த்வோந்மேஷாதிகளையும் உண்டாக்கிக் கொடுத்து அவ்வுபாஸநமாகிற உபாயத்தை பலபர்யந்தமாக்கிக் கொடுக்கும்.
– ப்ரபத்தியைக் கைக்கொண்ட முமுக்ஷுவிற்கு, அனைத்துவிதமான உபாயங்களாக ஸர்வேச்வரனே உள்ளான். பக்தியில் ஈடுபட்ட பக்தனுக்கும் ஸர்வேச்வரனின் ஈடுபாடு உள்ளது. இவர்கள் கர்மயோகத்தில் ஈடுபடும்போது, அவர்களின் பாவங்கள் காரணமாக அந்தக் கர்மங்கள் தடைபட வாய்ப்புள்ளது. இதனால் கர்மம் தொடங்குதல், தொடங்கிய கர்மம் முடியாமல் இருத்தல் போன்ற நிலைகள் உண்டாகின்றன. அப்போது ஸர்வேச்வரன் தலையிட்டு, அவர்களின் தடையாக உள்ள பாவங்களை நீக்கி, ஸத்வ குணம் மேலோங்கி உள்ளபடி செய்கிறான். இவர்கள் தங்களின் உபாயமாகக் கைக்கொண்டுள்ள உபாஸநம், த்யானம் முதலானவை பலன் தரும்படிச் செய்கிறான்.